/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார் ஊழியர்களை தாக்கிய ஆறு பேருக்கு வலை
/
பார் ஊழியர்களை தாக்கிய ஆறு பேருக்கு வலை
ADDED : செப் 27, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு நெடுஞ்சாலையில், '247' என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடை அருகே, மதுக்கூடம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் மது குடித்த சிலர், மதுக்கூட ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர்.
போதையில் பணம் தராமல் மது வாங்கி வரும்படியும் கூறியுள்ளனர்.
மதுக்கூட ஊழியர்களான புளியந்தோப்பைச் சேர்ந்த விஜயகாந்த்,44, மற்றும் ஸ்ரீகாந்த்,35, ஆகியோரை தாக்கினர். இதில் இருவருக்கும் தையல் போடுமளவு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தகவலின்படி, ஆறு பேர் கொண்ட குடிமகன்கள் கும்பலை, புளியந்தோப்பு போலீசார் தேடி வருகின்றனர்.