/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடையில் மண்டை ஓடு கோயம்பேடு சந்தையில் பரபரப்பு
/
பாதாள சாக்கடையில் மண்டை ஓடு கோயம்பேடு சந்தையில் பரபரப்பு
பாதாள சாக்கடையில் மண்டை ஓடு கோயம்பேடு சந்தையில் பரபரப்பு
பாதாள சாக்கடையில் மண்டை ஓடு கோயம்பேடு சந்தையில் பரபரப்பு
ADDED : நவ 08, 2025 02:33 AM
கோயம்பேடு: கோயம்பேடு சந்தை பாதாள சாக்கடையில் கிடந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் உள்ள பாதாள சாக்கடையை, ஒப்பந்த ஊழியர்களை வைத்து, அங்காடி நிர்வாக குழு பராமரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை கோயம்பேடு பழச்சந்தை வளாகத்தின் 18வது எண் கதவு அருகே உள்ள பாதாள சாக்கடை மேல் மூடியை திறந்து, இயந்திரத்தால் சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, பாதாள சாக்கடையில் இருந்து, மனித மண்டை ஓடு மற்றும் நீளமான இரண்டு எலும்புகள் கிடைத்தன. இது குறித்து, கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவற்றை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
குடிபோதையில் யாராவது அங்கு விழுந்து இறந்தார்களா அல்லது கொலை செய்யப்பட்டு உடல் பாதாள சாக்கடையில் வீசப்பட்டதா என, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.