/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
/
தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
ADDED : நவ 08, 2025 02:34 AM
சென்னை: சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 2021ல் இருந்து, ஹாவோடா பேமென்ட் சொல்யூஷன்ஸ் பி.லிட்., என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் சார்பில், கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி நிலையை கையாளுதல், ஆன்லைன் பண பரிவர்த்தனை தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை, சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன், கீர்த்தனா, விக்னேஷ்வர் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
இவர்கள், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களின் நிறுவனத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பாதுகாப்புடன் , அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஏற்கனவே இந்நிறுவனத்தில், சோதனை நடத்தி, ஆவணங்களையும் பறிமுதல் செய்து உள்ளனர்.

