ADDED : பிப் 18, 2024 12:10 AM

அம்பத்துார், பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ - மாணவியர், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், நினைவாற்றல், அறிவாற்றல் மேம்படவும், பரத்வாஜ் சுவாமிகளின் 1 லட்சம் ஸ்லோகம் பாராயணம் நடக்கிறது.
அம்பத்துார், ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி ஜகத்குரு பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள், 45 ஆண்டுகளுக்கு முன் அவரே கைப்பட எழுதிய, 1 லட்சம் ஸ்லோகங்கள் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அறுபத்து நான்கு கலைகளின் அன்னையான ஸ்ரீ ஸ்யாமளா தேவியின் நவராத்திரி தற்போது நடந்து வருகிறது. இதை முன்னிட்டு, பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியருக்காக, 1 லட்சம் ஸ்லோகங்கள் நாம பாராயணம் நடத்தப்பட்டு வருகிறது.
மாணவச் செல்வங்கள் அனைவரும், தாம் பெற்ற கல்வி மூலம் பூரணமாக மக்களுக்கு சேவை செய்து, அவர்களை உயர்த்திடவும், தாமும் உயர் பதவிகளை அடைந்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.