/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஸ்மார்ட் காவலர்' செயலி தேசிய அளவில் பாராட்டு
/
'ஸ்மார்ட் காவலர்' செயலி தேசிய அளவில் பாராட்டு
ADDED : பிப் 09, 2025 09:46 PM
சென்னை:தேசிய அளவில், 'ஸ்மார்ட் காவலர்' செயலி சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு, என்.சி.ஆர்.பி., ரன்னிங் கோப்பை வழங்கப்பட்டது.
தமிழக காவல் துறையில், சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி, நவீனமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 2022ல், சைலேந்திரபாபு டி.ஜி.பி.யாக இருந்தபோது, ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தின் வாயிலாக காவல் பணியை மேம்படுத்துவது இந்த செயலியின் நோக்கம். இந்த செயலியில் பழைய குற்றவாளிகள், திருட்டு போன வாகனங்களின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதால், ரோந்து போலீசாரின் பணிச்சுமை குறைந்துள்ளது.
அதன்படி, ஸ்மார்ட் காவலர் செயலி வாயிலாக கடந்தாண்டு, 21 லட்சத்து 48,074 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்தோடு; 3 லட்சத்து 4,635 நபர்களும் சோதிக்கப்பட்டு உள்ளனர். இந்த செயலிக்கு சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த, 68-வது அகில இந்திய காவல்துறை கடமை கூட்டத்தில், கணினி விழிப்புணர்வு போட்டியில், தமிழக போலீஸ்துறையின் 'ஸ்மார்ட் காவலர்' செயலி, நாட்டிலேயே சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, தகவல் தொழில்நுட்பத்துடன் காவல்துறைக்கு அதிகாரம் அளிப்பதற்காக, தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் ரன்னிங் கோப்பை வழங்கப்பட்டு உள்ளது.

