/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முகலிவாக்கம் பகுதியில் பாம்புகள் படையெடுப்பு
/
முகலிவாக்கம் பகுதியில் பாம்புகள் படையெடுப்பு
ADDED : மார் 20, 2025 12:14 AM

முகலிவாக்கம்,ஆலந்துார் மண்டலம், முகலிவாக்கம், 156வது வார்டில் ராஜராஜேஸ்வரி நகர், உதயாநகர் அமைந்துள்ளது. இந்த நகர்களுக்கு இடையே தனியார் சிலருக்கு சொந்தமான இடம் ஒரு ஏக்கருக்கும் மேல் உள்ளது. அதில், யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்னையும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், குறிப்பிட்ட இடம் பராமரிப்பின்றி கருவேல முள், செடி, கொடி வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. மழைக்காலதில் இரண்டு நகரில் வெளியேறும் மழைநீர் அங்கு தஞ்சமடையும். அதனால், ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன.
மேலும், புதர்மண்டிய பகுதியில் ஏராளமான விஷ ஜந்துக்கள் வசித்து வருகின்றன. தற்போது வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் அங்கிருந்து அதிகளவிலான பாம்புகள் வெளியேறி குடியிருப்புகளில் படையெடுக்கின்றன.
தனியார் இடங்களில் உள்ள புதர்களை மாநகராட்சி அப்புறப்படுத்தி, அதற்கான கட்டணத்தை உரிமையாளரிடம் பெறுவது வழக்கத்தில் உள்ளது. அதே முறையில் அந்த இடத்தில் உள்ள புதர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும், வனத்துறையினர் அங்குள்ள பாம்புகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
***