/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்யாண வரதராஜர் கோவிலில் சொக்கப்பனை வைபவம் விமரிசை
/
கல்யாண வரதராஜர் கோவிலில் சொக்கப்பனை வைபவம் விமரிசை
கல்யாண வரதராஜர் கோவிலில் சொக்கப்பனை வைபவம் விமரிசை
கல்யாண வரதராஜர் கோவிலில் சொக்கப்பனை வைபவம் விமரிசை
ADDED : டிச 17, 2024 12:17 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டை - கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி, சொக்கப்பனை ஏற்றும் வைபவம் நடந்தது.
ஸ்ரீ தேவி - பூதேவி சமேத கல்யாண வரதராஜ பெருமாள் மற்றும் உற்சவர் பவள வண்ண பெருமாளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
தொடர்ந்து, மைய மண்டபத்தில் ஏற்றி வைக்கப்பட்ட அகல் விளக்குகள் உட்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சன்னிதிகளின் மாடத்தில் ஏற்றப்பட்டன.
பின், கோவில் ராஜகோபுரத்தின் முன், 20 அடி உயரத்திற்கு, பனை ஓலைகள் மற்றும் பட்டாசுகளுடன் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையில், விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது.
மேலும், மார்கழி மாதம் துவக்கத்தையொட்டி, நேற்று அதிகாலையில் திருப்பாவை சேவிப்பு நிகழ்ச்சி துவங்கியது.
இந்த மாதத்தின், 30 நாட்கள் அதிகாலை, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை சேவிப்பர்.
திருப்பாவை சேவிப்பில் பங்கேற்பதால், திருமண தடை நீங்கும், நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். இதன் நிறைவாக, போகி பண்டிகையின் போது, ஆண்டாள் திருக்கல்யாண உற்வசம் நடக்க உள்ளது.

