/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாரதியார் நகரில் வெள்ள பாதிப்பிற்கு தீர்வு ரூ. 2.5 கோடியில் விடுபட்ட வடிகால் அமைப்பு
/
பாரதியார் நகரில் வெள்ள பாதிப்பிற்கு தீர்வு ரூ. 2.5 கோடியில் விடுபட்ட வடிகால் அமைப்பு
பாரதியார் நகரில் வெள்ள பாதிப்பிற்கு தீர்வு ரூ. 2.5 கோடியில் விடுபட்ட வடிகால் அமைப்பு
பாரதியார் நகரில் வெள்ள பாதிப்பிற்கு தீர்வு ரூ. 2.5 கோடியில் விடுபட்ட வடிகால் அமைப்பு
ADDED : மார் 21, 2025 12:10 AM

எண்ணுார்,பாரதியார் நகர் சந்திப்பில், வெள்ள பாதிப்பிற்கு தீர்வாக, 2.5 கோடி ரூபாய் செலவில், விடுபட்ட வடிகால் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.
திருவொற்றியூர் பாரதியார் நகர், நேதாஜி நகர், வடக்கு பாரதியார் நகர் மற்றும் சுனாமி குடியிருப்பில் இருந்து வெளியேறும் மழைநீர், பாரதியார் நகர் சந்திப்பில் தேங்கி, வடிகால் வழியாக, கடலுக்கு செல்ல வேண்டும்.
முறையான வடிகால் வசதி இல்லாததால், பாரதியார் நகர் சந்திப்பில் தேங்கும் மழைநீரை, ராட்சத மின்மோட்டர்கள் வாயிலாக, கடலுக்கு கடத்த வேண்டிய சூழல் உள்ளது.
தொடர் மழை காலங்களில், அளவுக்கு அதிகமான மழைநீரை கடத்த முடியா சூழல் ஏற்படும் போது, பாரதியார் நகர் சந்திப்பு முழுதும், மழைநீரால் மூழ்கி, போக்குவரத்து முற்றிலுமாக துண்டித்து விடுகிறது.
எனவே, நேதாஜி நகர் முதல் பாரதியார் நகர் வரையிலான, விடுபட்ட வடிகாலை அமைத்து, கடலுடன் இணையும் பகுதியில் மதகு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என, 5 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கம், மண்டல குழு கூட்டங்களில் தொடர் கோரிக்கை வைத்தார்.
அதன்படி, நேதாஜி நகர் - பாரதியார் நகர் சந்திப்பு வரை, ஆசிய வங்கியின் வளர்ச்சி நிதியான, 2.5 கோடி ரூபாய் செலவில், 1 கி.மீ., துாரம், ஐந்தடி அகலத்திற்கு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
வரும் மே, 15 க்குள் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டு, கடலுடன் இணையும் பகுதியில், மதகு அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இதன் வாயிலாக, பாரதியார் நகர் ஒட்டிய, 100 ஏக்கர் நிலங்களில் மழைநீர் தேக்கம் பிரச்னை இருக்காது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.