/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாயின் வீட்டில் தீ வைத்த மகன் கைது
/
தாயின் வீட்டில் தீ வைத்த மகன் கைது
ADDED : மார் 04, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார்: கொளத்துாரைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன், 51. எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவர், சரஸ்வதி, 45 என்பவரை, கடந்த 2010ல் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
தாயின் வீட்டில் தீ வைத்த மகன் கைது
சரஸ்வதியின் முதல் கணவர் பாலு இறந்துவிட்ட நிலையில், அவர் மூலம் பிறந்த அரும்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்கிற கரண், 21, நேற்று முன்தினம் யோகேஸ்வரன் வீட்டிற்கு சென்று, சரஸ்வதியிடம் பணம் கேட்டுள்ளார்.
அவர் தர மறுத்த நிலையில், பீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து வீட்டின் மீது எறிந்துள்ளார். கொளத்துார் போலீசார், கரணை கைது செய்தனர்.