/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாமியாருக்கு மிரட்டல் மருமகன் கைது
/
மாமியாருக்கு மிரட்டல் மருமகன் கைது
ADDED : ஜன 17, 2025 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஜாம்பஜார், பக்கீர்சாகிப், மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் ரேவதி, 54. இவரது வீட்டிலேயே, மகள் இளையவாணி திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளையவாணிக்கும், அவரது கணவர் செல்வேந்திரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், 14ம் தேதி ரேவதி, மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வெளியே சென்று, வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
அப்போது, மதுபோதையில் இருந்த செல்வேந்திரன், மாமியார் மற்றும் மனைவியை தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார். மேலும், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.
ஜாம்பஜார் போலீசார் வழக்கு பதிந்து, செல்வேந்திரனை, 45, நேற்று கைது செய்தனர்.