/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாயை சரமாரியாக குத்தி கொன்ற மகன்; வேலைக்கு செல்ல அறிவுறுத்தியதால் வெறி
/
தாயை சரமாரியாக குத்தி கொன்ற மகன்; வேலைக்கு செல்ல அறிவுறுத்தியதால் வெறி
தாயை சரமாரியாக குத்தி கொன்ற மகன்; வேலைக்கு செல்ல அறிவுறுத்தியதால் வெறி
தாயை சரமாரியாக குத்தி கொன்ற மகன்; வேலைக்கு செல்ல அறிவுறுத்தியதால் வெறி
UPDATED : பிப் 06, 2026 09:09 AM
ADDED : பிப் 06, 2026 05:49 AM

சென்னை: வேலைக்கு செல்ல அறிவுறுத்திய தாயை, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, நொளம்பூர், 2வது பிளாக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆக்ஸிலியா, 57. இவர், கடந்த 15 ஆண்டுகளாக கணவரை பிரிந்து, மகன் நிகில் பிரிட்டோ, 28, என்பவருடன் வசித்து வந்தார்.
பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த நிகில் பிரிட்டோ, 2024ல் சென்னை திரும்பியுள்ளார். பின், வேலைக்கு செல்லாமல், பல்வேறு நிறுவனங்களில் கடன் வாங்கி, செலவு செய்து வந்துள்ளார்.
கடன் கொடுத்தவர்கள், வீட்டிற்கு வந்து பணத்தை திருப்பி கேட்டு பிரச்னை செய்யவே, மகனை வேலைக்கு செல்லும்படி, ஆக்ஸிலியா வற்புறுத்தி வந்துள்ளார்.
வழக்கம்போல, நேற்று காலை, மகனை வேலைக்கு செல்லும்படி, ஆக்ஸிலியா அறிவுறுத்திஉள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நிகில் பிரிட்டோ, கத்தியால் ஆக்ஸிலியாவை சரமாரியாக குத்தி கொலை செய்து, எதுவும் நடக்காதது போல், வீட்டில் படுத்து உறங்கியுள்ளார்.
பலமுறை அழைத்தும் நிகில் பிரிட்டோ போனை எடுக்காததால், சந்தேகமடைந்த அவரது நண்பர்கள், நேற்று மதியம் வீட்டுக்கு சென்று பார்த்தனர். கதவை தட்டியும் திறக்காததால், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நொளம்பூர் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஆக்ஸிலியா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, நிகில் பிரிட்டோவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

