/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தந்தையை கொலை செய்த ரவுடியை 17 ஆண்டு காத்திருந்து பழித்தீர்த்த மகன் விசாரணையில் 'திடுக்
/
தந்தையை கொலை செய்த ரவுடியை 17 ஆண்டு காத்திருந்து பழித்தீர்த்த மகன் விசாரணையில் 'திடுக்
தந்தையை கொலை செய்த ரவுடியை 17 ஆண்டு காத்திருந்து பழித்தீர்த்த மகன் விசாரணையில் 'திடுக்
தந்தையை கொலை செய்த ரவுடியை 17 ஆண்டு காத்திருந்து பழித்தீர்த்த மகன் விசாரணையில் 'திடுக்
ADDED : ஆக 08, 2025 12:53 AM
'
டி.பி.,சத்திரம், டி.பி.சத்திரம் கொலை வழக்கில், 2தந்தையை கொலை செய்த ரவுடியை, 17 ஆண்டுகள் காத்திருந்து மகனே தீர்த்துக்கட்டியது' என்ற திடுக் தகவல் விசாரணையில் வெளியானது.
டி.பி.சத்தரம், ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்தவர் ரவுடி ராஜ்குமார், 37; பழைய குற்றவாளி. இவர், அதே பகுதியில், பந்தல் போடும் வேலை செய்து வந்தார். அ.தி.மு.க., நிர்வாகியாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.
ராஜ்குமாரை, நேற்று முன்தினம் மதியம், 1:15 மணியளவில், குடியிருப்பு பகுதியில், மர்மநபர்கள் ஓட ஓட விரட்டினர். அதே பகுதியில் உள்ள மற்றொரு தெருவில் வில்சன் என்பவரின் வீட்டிற்குள் பதுங்கிய ராஜ்குமாரை, குழந்தைகள் கண்முன்னே வெட்டி கொலை செய்து தப்பினர்.
இது குறித்து, டி.பி.சத்திரம் போலீசார் விசாரித்தனர். இதற்கிடையில், ராஜ்குமாரை, சிறுவர்கள் சிலர் நடந்து சென்று நோட்டமிட்டு, அரிவாளுடன் விரட்டி செல்லும் 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகின.
நேற்று முன்தினம் நள்ளிரவு, வழக்கு தொடர்பாக ஜோதியம்மாள் நகர் 27வது தெருவைச் சேர்ந்த யுவனேஷ், 19, மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர், அண்ணா நகர் போலீசில் சரணடைந்தனர். மூவரிடமும் டி.பி.சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., முதலாம் ஆண்டு படிக்கும் யுவனேஷின் தந்தை செந்தில் குமாரை, 2008ல் ரவுடி ராஜ்குமார் கும்பல் கொலை செய்துள்ளது. இதற்கு பழிதீர்க்கும் விதமாக 17 ஆண்டுகள் காத்திருந்து, தீர்த்துக்கட்டியது தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
சென்னையில், பிரபல கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணியின் வளர்ப்பு மகன் யுவனேஷின் தந்தை செந்தில்குமார். யுவனேஷுக்கு 2 வயதாகும்போது, முன்விரோதம் காரணமாக 2008ல் செந்தில்குமார் அமைந்தகரையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், ரவுடி தீச்சட்டி முருகன், ராஜ்குமார், ஜெயராஜ், பைனான்சியர் ஆறுமுகம், பிரான்சிஸ், குள்ள சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதில், பைனான்சியர் ஆறுமுகம், தீச்சட்டி முருகன், ஜெயராஜ் ஆகியோர், வெவ்வேறு பிரச்னைகளில் கொலை செய்யப்பட்டனர். பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் இறந்தார்.
குள்ள சுரேஷ், ராஜ்குமார் இருவர் மட்டுமே இருந்தாகவும், 2021ல் வழக்கில் விடுதலையாகியதும் தெரிகிறது. ஐந்து ஆண்டுகளாக, ராஜ்குமார் எந்த பிரச்னைக்கு செல்லாமல் திருந்தி வாழ்ந்துள்ளார்.
அதேநேரம், தந்தை கொலையை குறித்து அறிந்த யுவனேஷ், சிறு வயதில் இருந்தே ராஜ்குமாரை பார்த்து முறைத்தபடி சென்றுள்ளார்.
அடிக்கடி, ராஜ்குமாரும், 'உன் அப்பாவை நான் தான் கொன்றேன்; உனக்கும் அதேநிலை தான்' என மிரட்டியுள்ளார். இந்த நிலையில், யுவனேஷ் தன் நண்பர்களுடன் சேர்ந்து, ராஜ்குமாரை தீர்த்துக்கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இந்த வழக்கு தொடர்பாக, மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.