/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென் மண்டல பேட்மின்டன் போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை 'சாம்பியன்'
/
தென் மண்டல பேட்மின்டன் போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை 'சாம்பியன்'
தென் மண்டல பேட்மின்டன் போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை 'சாம்பியன்'
தென் மண்டல பேட்மின்டன் போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை 'சாம்பியன்'
ADDED : அக் 30, 2024 07:30 PM

சென்னை:தென் மண்டல ஆடவர் பேட்மின்டன் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்திய பல்கலைகள் சங்க ஆதரவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், தென் மண்டல ஆடவர் பேட்மின்டன் போட்டி, காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில், நேற்று நிறைவடைந்தது.
போட்டியில், தென் மண்டல அளவில், 120 பல்கலை அணிகள் பங்கேற்று, 'நாக் - அவுட்' முறையில் மோதின. முதல் அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட் அணி, 3 - 2 என்ற செட் கணக்கில், ஆந்திரா பல்கலையை தோற்கடித்தது. மற்றொரு அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலையை வீழ்த்தியது.
இறுதி போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை, எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட் அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், 3 - 2 என்ற செட் கணக்கில் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.
மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், மகாத்மா காந்தி பல்கலை அணி, 3 - 2 என்ற கணக்கில், ஆந்திரா பல்கலையை தோற்கடித்து வெற்றி பெற்றது.