/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென் மண்டல ஹாக்கி சென்னை பல்கலை அபாரம்
/
தென் மண்டல ஹாக்கி சென்னை பல்கலை அபாரம்
ADDED : ஜன 05, 2025 09:46 PM

சென்னை:சென்னை பல்கலையின் தென் மண்டல ஆடவர் ஹாக்கி போட்டி, எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி ஆதரவில், காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்கிறது.
போட்டியில், தென் மாநில அளவில், 68 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த ஆட்டங்களில், சென்னை பல்கலை மற்றும் வேல்ஸ் பல்கலை அணிகள் எதிர்கொண்டன.
அதில், 3 - 2 என்ற கோல் கணக்கில், சென்னை பல்கலை வெற்றி பெற்றது. மற்ற ஆட்டங்களில், ஜேப்பியார் பல்கலை 4 - 0 என்ற கணக்கில், ஆந்திராவின் ஜெ.என்.டி.யூ., பல்கலையையும், பாரதிதாசன் பல்கலை 5 - 0 என்ற கணக்கில், கர்நாடகாவின் வி.கே.எஸ்.பி., பல்கலையையும் வீழ்த்தின.
அண்ணாமலை பல்கலை மற்றும் கர்நாடகாவின் கிரிஸ்ட் பல்கலைகளுக்கு இடையிலான ஆட்டம், 1 - 1 என்ற கணக்கில் 'டிரா'வில் முடிந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.