/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நங்கநல்லுாரில் சிறப்பு ஆதார் முகாம்
/
நங்கநல்லுாரில் சிறப்பு ஆதார் முகாம்
ADDED : அக் 03, 2024 12:45 AM
நங்கநல்லுார்: இந்திய அஞ்சல் துறை, ஆலந்துார் மண்டலம், 167வது வார்டு தி.மு.க., இணைந்து, இரண்டு நாள் சிறப்பு ஆதார் முகாமை, நங்கநல்லுாரில் நடத்துகின்றன.
நங்கநல்லுார், 100 அடி சாலை வார்டு கவுன்சிலர் அலுவலகத்தில், நாளை காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை முகாம் நடக்கிறது.
இதில், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் எடுக்க பெற்றோர் ஆதார் கார்டு அவசியம்.
புது கார்டுகள் இலவசமாக எடுக்கப்படுகின்றன. பெயர் மாற்றத்திற்கு பான்கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் கொண்டுவர வேண்டும்.
பிறந்த தேதி மாற்றத்திற்கு பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ், கல்விச் சான்றிதழ் கொண்டுவர வேண்டும். முகவரி மாற்றத்திற்காக ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், காஸ் ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் கொண்டுவர வேண்டும்.
ஆதார் திருத்தம் செய்ய, 50 ரூபாய், புகைப்படத்துடன் கூடிய ஆதார் திருத்தம் செய்ய, 100 ரூபாய், மொபைல்போன் எண் சேர்க்க, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொடர்ந்து இரு நாட்கள் நடக்கும். நங்கநல்லுார் சுற்றுவட்டார பகுதிமக்கள் வந்து பயனடையலாம்.