sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 27, 28ல் சிறப்பு முகாம்

/

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 27, 28ல் சிறப்பு முகாம்

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 27, 28ல் சிறப்பு முகாம்

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 27, 28ல் சிறப்பு முகாம்


ADDED : டிச 26, 2025 05:14 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு, சனி, ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:

வரைவு வாக்காளர் பட்டியல், 19ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறுவது, வரும் ஜன., 18ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில், தகுதியான குடிமக்கள் விண்ணப்பிக்க வசதியாக, 4,079 ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 27, 28, ஜன., 3, 4 ஆகிய தேதிகளில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இதில், 18 வயது நிரம்பிய தகுதியுடையோர், படிவம் - 6 சமர்ப்பிக்கலாம். மேலும், ஒரு சட்டபை தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க படிவம் - 7 வழங்கலாம்.

அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையோர், படிவம் - 8 பூர்த்தி செய்து வழங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us