/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தங்கமயில் ஜுவல்லரியில் சிறப்பு சலுகை அறிவிப்பு
/
தங்கமயில் ஜுவல்லரியில் சிறப்பு சலுகை அறிவிப்பு
ADDED : டிச 25, 2025 05:21 AM
சென்னை: மதுரையை தலைமையிடமாக கொண்டு, தமிழகத்தில் 67 கிளைகளுடன் செயல்படும் தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம், தன் 34வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதையொட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
ஆண்டு விழாவை ஒட்டி, வரும் ஜன., 1ம் தேதி வரை, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். தங்க செயின், நெக்லஸ் மற்றும் வளையல்களுக்கு சேதாரத்தில் 50 சதவீதம் தள்ளுபடியும், மற்ற அனைத்து தங்க நகைகளுக்கும் சேதாரத்தில், 30 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.
வைர பெல்ஜியம் கட் வைர நகைகளுக்கு 30,000 ரூபாய் வரை சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. வெள்ளி பாத்திரங்கள் மற்றும் கொலுசுகளுக்கு செய்கூலி இல்லை.
மேலும், வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு ஒரு லட்சம் ரூபாய் பொருளுக்கும் டிஜிட்டல் 'ஸ்கிராட்ச் கார்டு' வாயிலாக பரிசு காத்திருக்கிறது. தவிர, சேமிப்பு திட்டத்தில் இணையும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

