/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழிப்பறி வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ.,க்கள்; மேலும் ஒருவரிடம் ரூ.20 லட்சம் பறித்தது அம்பலம் ஸன்னி லாய்ட் உட்பட 7 பேர் மீது வழக்கு

ADDED : பிப் 03, 2025 06:49 AM

சென்னை ; வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ராஜா சிங், ஸன்னி லாய்ட் கூட்டணி, மேலும் ஒருவரிடம், 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தது அம்பலமாகி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர் பிரபு, 31.
அதே அலுவலகத்தில் ஆய்வாளராக தாமோதரன், 41, அலுவலக ஊழியராக பிரதீப், 42, ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். தற்போது மூவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.
மிரட்டி வழிப்பறி
இவர்கள் மூவரும், சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலைய சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங், 48, சைதாப்பேட்டை போலீஸ் நிலைய சிறப்பு எஸ்.ஐ., ஸன்னி லாய்ட், 48, ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, சென்னையில் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்டும் ரூபாய் நோட்டுகளை, ஹவாலா பணம் என மிரட்டி வழிப்பறி செய்து வந்துள்ளனர்.
கடந்த மாதம், 16ம் தேதி இரவு, திருவல்லிக்கேணி பகுதியில், முகமது கவுஸ் என்பவரை காரில் கடத்திச் சென்று, 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தனர். அவர் அளித்த புகாரில், ஐந்து பேரையும் திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களில் சிறப்பு எஸ்.ஐ., ஸன்னி லாய்டை, திருவல்லிக்கேணி போலீசார் நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது, ஸன்னி லாய்ட் அளித்த வாக்குமூலத்தில், 'நான், ராஜா சிங், பிரபு, தாமோதரன், பிரதீப், வணிக வரித்துறை அலுவலகத்தில் அலுவலர்களாக பணிபுரியும் சுரேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் சேர்ந்து, டிசம்பர் 11ம் தேதி, ஆயிரம் விளக்கு பகுதியில், தமீம் அன்சாரி என்பவர் எடுத்து சென்ற 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்தோம்' என்று கூறியுள்ளார்.
மீண்டும் கைது
இதையடுத்து, ராஜா சிங், ஸன்னி லாய்ட் உள்ளிட்ட ஏழு பேர் மீது, ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில், ராஜா சிங் உள்ளிட்ட ஐந்து பேரையும் மீண்டும் கைது செய்ய உள்ளனர். தலைமறைவாக உள்ள சதீஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.