/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாகர்கோவில், துாத்துக்குடி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்
/
நாகர்கோவில், துாத்துக்குடி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்
நாகர்கோவில், துாத்துக்குடி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்
நாகர்கோவில், துாத்துக்குடி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்
ADDED : அக் 06, 2024 12:20 AM
சென்னை,
சென்னையில் இருந்து நாகர்கோவில், துாத்துக்குடி, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கோவையில் இருந்து, இன்று இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு எழும்பூர் வரும். எழும்பூரில் இருந்து நாளை காலை 10:30 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மாலை 6:00 மணிக்கு போத்தனுார் செல்லும். சென்ட்ரலில் இருந்து, வரும் 9ம் தேதி இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:50 மணிக்கு நாகர்கோவில் செல்லும். நாகர்கோவிலில் இருந்து, 10ம் தேதி இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:25 மணிக்கு சென்ட்ரல் வரும்.
சென்ட்ரலில் இருந்து, 8ம் தேதி இரவு 11:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1:50 மணிக்கு துாத்துக்குடி செல்லும். அங்கிருந்து வரும் 9ம் தேதி மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:55 மணிக்கு சென்ட்ரல் வரும்.
இந்த ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள்
பண்டிகை காலத்தையொட்டி, திருச்சியில் இருந்து வரும் 11 முதல் டிச., 31ம் தேதி வரை, செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் அதிகாலை 5:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள் , அதேநாளில் மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வரும்.
தாம்பரத்தில் இருந்து வரும் 11 முதல் டிச., 31ம் தேதி வரை செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள், அதேநாளில் இரவு 11:35 மணிக்கு திருச்சி செல்லும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.