/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனி முருகன் கோவிலில் இன்று வரலட்சுமி நோன்பு சிறப்பு வழிபாடு
/
வடபழனி முருகன் கோவிலில் இன்று வரலட்சுமி நோன்பு சிறப்பு வழிபாடு
வடபழனி முருகன் கோவிலில் இன்று வரலட்சுமி நோன்பு சிறப்பு வழிபாடு
வடபழனி முருகன் கோவிலில் இன்று வரலட்சுமி நோன்பு சிறப்பு வழிபாடு
ADDED : ஆக 08, 2025 12:41 AM
சென்னை, ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வடபழனி முருகன்ருமான் கோவிலில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு இன்று சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடத்தி, வழிபாடு நடத்தப்படுகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு மாங்கல்ய சரடு பிரசாதம் வழங்கப்படுகிறது.
வரலட்சுமி நோன்பு அல்லது மகாலட்சுமி விரதம் என்பது செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் முக்கியமான விரதம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை, வரலட்சுமி பூஜை நோன்பு நாள்.
சுமங்கலிப் பெண்கள், தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், குடும்பங்கள் செல்வ, செழிப்போடு இருக்கவும், நல்ல கணவன் அமைய வேண்டி கன்னிப் பெண்களும் இந்த விரதத்தை மேற்கொள்வர்.
அதன்படி, வரலட்சுமி நோன்பான இன்று வடபழனி முருகன் கோவிலில் அருள்பாலிக்கும் மீனாட்சி அம்மனுக்கு, காலை 8:30 மணிக்கு மஞ்சள் காப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. மாலை புடவை சார்த்தி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, 25க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் இணைந்து, லலிதா சகஸ்ரநாமம் பராயணம் செய்கின்றனர். அவர்களுக்கு பிரசாதமாக ரவிக்கை துணி, மாங்கல்ய சரடு வழங்கப்படுகிறது.
மேலும், மீனாட்சி அம்மனை தரிசக்க வரும், 1,000 பெண்களுக்கு மாங்கல்ய சரடும் பிரசாதமாக வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
***