
தேசிய தடகளம்
முகமது சதக் பள்ளி
மாணவனுக்கு வெள்ளி
சென்னை:
தேசிய அளவிலான, 40வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதன் 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த முகமது சதக் பள்ளி மாணவன் ரோகித், போட்டி துாரத்தை, 13.84 வினாடிகளில் கடந்து, வெள்ளி பதக்கம் வென்றார்.
மாநில போட்டிக்கு
சென்னை வீரர்கள் தகுதி
பள்ளிக் கல்வித் துறை
சார்பில், மாநில அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டி, தஞ்சாவூரில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க, சென்னை மாவட்ட அணியில், முகமது சதக் பள்ளியைச் சேர்ந்த ரோகித் - தடை ஓட்டம்; டீனா - நீளம் தாண்டுதல்; நதியா - தட்டு எறிதல் மற்றும் ராகுல் - தட்டு எறிதல் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
பல்கலை டென்னிஸ்
எம்.ஓ.பி., முதலிடம்
சென்னை:
சென்னை பல்கலையின் 'ஏ' மண்டல மகளிர் டென்னிஸ் இறுதிப்போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவா மற்றும் ராணிமேரி கல்லுாரி அணிகள் மோதின.
தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில், எம்.ஓ.பி., வைஷ்ணவா அணி, 3 - 0 என்ற புள்ளி கணக்கில், ராணிமேரி கல்லுாரியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மூன்றாம் இடத்தை, ஜெபாஸ் கல்லுாரி அணி கைப்பற்றியது.