PUBLISHED ON : அக் 17, 2025 12:00 AM

வள்ளியம்மை அணி
பேட்மின்டனில் சாம்பியன்
அண்ணா பல்கலையின், நான்காவது மண்டல பால் பேட்மின்டன் போட்டி, கிண்டி, எம்.ஐ.டி., வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இறுதி போட்டியில், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை மற்றும் எம்.ஐ.டி., அணிகள் மோதின. இதில் 3 - 0 என்ற செட் கணக்கில் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை அணி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.
சிந்து, ஸ்பார்டன் பள்ளி
பேட்மின்டனில் வெற்றி
பள்ளிக்கல்வித் துறையின் வருவாய் மாவட்ட அளவிலான பேட்மின்டன் போட்டி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி சார்பில், கீழ்ப்பாக்கம், நேரு பூங்காவில் நடக்கிறது.
அனைத்து சுற்றுகள் முடிவில், ஒற்றையர் பிரிவு 17 வயதில் நுங்கம்பாக்கம், சிந்து மாடல் பள்ளி முதலிடத்தையும், அயனாவரம், கன்னட சங்க பள்ளி இரண்டாமிடத்தையும் கைப்பற்றின.
அதேபோல், 19 வயது பிரிவில் முகப்பேர் ஸ்பார்டன் பள்ளி முதலிடத்தையும், அண்ணா நகர் செயின்ட் ஜார்ஜ் பள்ளி இரண்டாமிடத்தையும், ஆலந்துார் ஏ.டி.டபிள்யூ பள்ளி மூன்றாம் இடத்தையும் வென்றன.
டிவிஷன் கிரிக்கெட்
மெட்ராஸ் சி.சி., வெற்றி
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ஆண்களுக்கான இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் தொடரில், சென்னை எஸ்.ஆர்.எம்., கிரிக்கெட் மைதானத்தில் மெட்ராஸ் சி.சி., விளையாடியது. முதலில் ஆடி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு, 349 ரன்கள் எடுத்தது. எதிர்த்து குரோம்பெஸ்ட் அணி களமிறங்கியபோது, 42 ஓவரில் மழை பெய்ததால், போட்டி நிறுத்தப்பட்டது. வி.ஜே.டி., முறையில் மெட்ராஸ் சி.சி., அணி, 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.