ADDED : ஆக 20, 2026 04:45 PM
அ நிறம் | அளவு
லேடி ஆண்டாள் பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி, சேத்துப்பட்டு பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த முதல் அரையிறுதியில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் அணி 25 – 12, 25 – 15 என்ற நேர் செட் கணக்கில் செங்கல்பட்டு கொலம்பஸ் பள்ளி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதியில், அயனாவரம் பி.எம்.எஸ்., பள்ளி அணி 25 – 22, 25 – 18 என்ற கணக்கில் சாந்தோம் மேல்நிலைப் பள்ளியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இரு அணிகளும், இன்று நடக்கும் இறுதி போட்டியில் மோதுகின்றன.
