/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆர்.எம்.கே., பள்ளியில் விளையாட்டு தின விழா
/
ஆர்.எம்.கே., பள்ளியில் விளையாட்டு தின விழா
ADDED : ஜன 07, 2025 12:18 AM

சென்னை, சென்னையை அடுத்த கவரைப்பேட்டையில், ஆர்.எம்.கே., பாடசாலா பள்ளியில், 11வது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது.
விழாற்கு ஆர்.எம்.கே., கல்விக் குழும தலைவர் வித்யாரத்னா ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தனராக பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறையின் இயக்குனர் கண்ணப்பன், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, விழாவை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.
மேலும், குழு போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில், கல்விக் குழுமத் துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலர் எலமஞ்சி பிரதீப், பள்ளியின் முதல்வர் சந்திரிகா பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

