/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளையாட்டு தினம் ஹாக்கி போட்டி வைஷ்ணவா கல்லுாரிகள் 'சாம்பியன்'
/
விளையாட்டு தினம் ஹாக்கி போட்டி வைஷ்ணவா கல்லுாரிகள் 'சாம்பியன்'
விளையாட்டு தினம் ஹாக்கி போட்டி வைஷ்ணவா கல்லுாரிகள் 'சாம்பியன்'
விளையாட்டு தினம் ஹாக்கி போட்டி வைஷ்ணவா கல்லுாரிகள் 'சாம்பியன்'
ADDED : ஆக 29, 2025 10:19 PM

சென்னை, தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடந்த ஹாக்கி போட்டியில், ஆண்களில் டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரியும், பெண்களில் எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரியும் முதலிடங்களை கைப்பற்றின.
புகழ்பெற்ற ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளான, தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில் நடந்த ஹாக்கி போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நேற்று நிறைவடைந்தது.
இதில், பெண்களில் எம்.ஓ.பி., வைஷ்ணவா, ராணிமேரி கல்லுாரி, தமிழக போலீஸ், ஆண்களில் லயோலா, செயின்ட் ஜோசப், டி.ஜி., வைஷ்ணவா, ஜேப்பியார் பல்கலை ஆகிய ஏழு அணிகள் மோதின.
நேற்று நடந்த பெண்களுக்கான இறுதிப் போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவா மற்றும் தமிழக போலீஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், 2- 1 என்ற கோல் கணக்கில் எம்.ஓ.பி., அணி வெற்றி பெற்று 'சாம்பியன்' கோப்பையை வென்றது.
அதேபோல், ஆண்களில் அரும்பாக்கம் டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரி, 1 - 0 என்ற கணக்கில் லயோலா கல்லுாரியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி பரிசுகளை வழங்கினார்.