/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காஞ்சி மாவட்ட சப் - ஜூனியர் ஹாக்கி வீரர்கள் தேர்வு முகாம்
/
காஞ்சி மாவட்ட சப் - ஜூனியர் ஹாக்கி வீரர்கள் தேர்வு முகாம்
காஞ்சி மாவட்ட சப் - ஜூனியர் ஹாக்கி வீரர்கள் தேர்வு முகாம்
காஞ்சி மாவட்ட சப் - ஜூனியர் ஹாக்கி வீரர்கள் தேர்வு முகாம்
ADDED : மே 16, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,மே 17-
காஞ்சிபுரம் மாவட்ட ஆண்கள் சப் - ஜூனியர் ஹாக்கி அணி தேர்வு முகாம், இன்று நடக்கிறது.
தமிழ்நாடு ஹாக்கி யூனியன் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான சப் - ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப், மே 19 முதல் 23 வரை வேலுாரில் நடக்க உள்ளது.
இதற்கான காஞ்சிபுரம் அணி தேர்வு முகாம், இன்று காலை 7:30 மணிக்கு, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனை, ஆஸ்ட்ரோ டர்ப் மைதானத்தில் நடக்கிறது.
இதில் 01.01.2009க்கு பின் பிறந்த வீரர்கள் பட்டும் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 87545 84519 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் ஹாக்கி அமைப்பு அறிவித்துள்ளது.