/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உலக 'மாஸ்டர்ஸ்' நீச்சல் சென்னை வீரர் வெண்கலம்
/
உலக 'மாஸ்டர்ஸ்' நீச்சல் சென்னை வீரர் வெண்கலம்
ADDED : ஆக 14, 2025 11:39 PM

சென்னை,: சிங்கப்பூரில் நடந்த உலக அளவிலான மாஸ்டர்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை வீரர் அரவிந்த் நயினார். வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி, சிங்கப்பூரில், கடந்த 7ம் தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது. பல்வேறு வயது பிரிவில் தனித்தனியாக போட்டிகள் நடந்தன.
இதில், 30 முதல் 34 வயதுக்கு உட்டோருக்கான ஆண்கள் 200 மீட்டர் 'பேக்ஸ்ட்ரோக்' பிரிவில் பங்கேற்ற சென்னை வீரர் அரவிந்த் நயினார், வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த வயது பிரிவில், பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற சாதனையை அவர் எட்டியுள்ளார்.
அரவிந்த் நயினார், முன்னதாக, கடந்த ஆண்டு தோகாவில் நடந்த உலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியிலும், ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் வென்றவர்.