/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளையாட்டு செய்தி - சிறுவர் மாநில செஸ் 800 வீரர்கள் பங்கேற்பு
/
விளையாட்டு செய்தி - சிறுவர் மாநில செஸ் 800 வீரர்கள் பங்கேற்பு
விளையாட்டு செய்தி - சிறுவர் மாநில செஸ் 800 வீரர்கள் பங்கேற்பு
விளையாட்டு செய்தி - சிறுவர் மாநில செஸ் 800 வீரர்கள் பங்கேற்பு
ADDED : நவ 25, 2024 03:11 AM

சென்னை:சென்னையில் இயங்கி வரும் ஜி.எம்.செஸ் அகாடமி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரி சார்பில், சிறுவர் மற்றும் சிறுமியருக்கான, மாநில அளவிலான ஒருநாள் செஸ் போட்டி, நேற்று நடத்தப்பட்டது.
இதில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட பல மாவட்டங்களிலிருந்து 300 சிறுமியர், 500 சிறுவர்கள் என, மொத்தம் 800 வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
குரோம்பேட்டை, அண்ணா பல்கலைக்கு உட்பட்ட எம்.ஐ.டி., கல்லுாரி அரங்கில், 8, 10, 13 மற்றும் 25 வயதுக்குட்பட்ட பிரிவில், 'சுவிஸ்' அடிப்படையில் 'பிடே' விதிப்படி, தலா 20 நிமிடங்கள் என, ஏழு சுற்றுகளாக போட்டிகள் நடந்தன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 30 இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 8 வயது பிரிவில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.