/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளையாட்டு செய்தி டிவிசன் கிரிக்கெட் போட்டி ஐ.இ.சி., அணி அபார வெற்றி

ADDED : மே 01, 2025 11:49 PM

சென்னை, மே 2-
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. இதில், மூன்றாவது டிவிஷன் 'நாக் அவுட்' போட்டிகள், நேற்று ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள ஹிந்து கல்லுாரி வளாகத்தில் நடந்தது. போட்டியில், டி.வி.எஸ்., லுாகாஸ் - ஐ.இ.சி., அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த, ஐ.இ.சி., அணி, 29.2 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எதிர் அணி வீரர் பார்த்திபன், 37 ரன்கள் கொடுத்து 'ஹாட்ரிக்' சாதனையுடன் உடன் நான்கு விக்கெட் சாய்த்தார்.
எளிதான இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய டி.வி.எஸ்., லுாகாஸ் அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அணி பந்து வீச்சாளர் அரவிந்த் கிருஷ்ணன், அடுத்தடுத்து விக்கெட்கள் சாய்க்க டி.வி.எஸ்., லுாகாஸ் அணி 17.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு சுருண்டது. ஐ.இ.சி., வீரர் அரவிந்த் கிருஷ்ணன், 12 ரன்கள் மட்டுமே கொடுத்து, ஐந்து விக்கெட் சாய்த்து வெற்றிக்கு உதவினார். இதனால், ஐ.இ.சி., அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.