/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லிட்டில் மாஸ்டர்ஸ் சி.ஏ., அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/
லிட்டில் மாஸ்டர்ஸ் சி.ஏ., அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
லிட்டில் மாஸ்டர்ஸ் சி.ஏ., அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
லிட்டில் மாஸ்டர்ஸ் சி.ஏ., அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ADDED : மே 01, 2025 12:58 AM
சென்னை, லிட்டில் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அகாடமி சார்பில், பிரேயர் கோப்பைக்கான 12 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி, புழல் பகுதியில் நடக்கின்றன.
கிளப் அணிகளுக்கு இடையிலான இப்போட்டியில், மொத்தம் ஐந்து அணிகள், தலா நான்கு போட்டிகள் விதம் மோதி வருகின்றன.
லீக் போட்டி ஒன்றில், செயின்ட் ஜோசப் சி.ஏ., அணி, முதலில் பேட் செய்து, 25 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு, 231 ரன்கள் அடித்தது. அடுத்து பேட் செய்த, நாதெல்லா சி.ஏ., அணி 14.5 ஓவர்களில் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மற்றொரு போட்டியில், லிட்டில் மாஸ்டர்ஸ் சி.ஏ., அணி, 25 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 172 ரன்கள் அடித்தது. அடுத்து களமிறங்கிய, நாதெல்லா சி.ஏ., அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 61 ரன்கள் மட்டுமே அடித்து, 111 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.