sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பள்ளி அளவிலான கால்பந்து சேத்துப்பட்டில் துவக்கம்

/

பள்ளி அளவிலான கால்பந்து சேத்துப்பட்டில் துவக்கம்

பள்ளி அளவிலான கால்பந்து சேத்துப்பட்டில் துவக்கம்

பள்ளி அளவிலான கால்பந்து சேத்துப்பட்டில் துவக்கம்


ADDED : ஜன 26, 2025 02:53 AM

Google News

ADDED : ஜன 26, 2025 02:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சேத்துப்பட்டில் துவங்கிய, சென்னை மாவட்ட அளவில், பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், 64 அணிகள் பங்கேற்றுள்ளன.

சென்னையின் எப்.சி., - இங்கிலாந்து நார்விச் சிட்டி எப்.சி., கிளப்கள் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை, சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மைதானத்தில் நடத்துகின்றன.

இதில், யூ - 12, யூ - 14 பிரிவினருக்கு மட்டும், போட்டிகள் நடக்கின்றன. 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் நடக்கும் இப்போட்டியில், இரு பிரிவிலும் தலா 32 அணிகள் என, மொத்தம் 64 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி, பிப்., மூன்றாம் வாரம் வரை தொடர்ந்து நடக்கிறது.

நேற்று நடந்த யூ - 12 பிரிவில், எம்.சி.சி., பள்ளி மற்றும் அஞ்சுமன் மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையிலான ஆட்டம், 0 - 0 என்ற கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.

மற்றொரு ஆட்டத்தில், எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளி, 2 - 0 என்ற கோல் கணக்கில், பல்லவன் சாலை கேந்திரிய வித்யாலயா பள்ளியை வீழ்த்தியது.

மயிலாப்பூர், செட்டிநாடு வித்யாஷ்ரம் மற்றும் அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளிகளுக்கு இடையிலான ஆட்டம், 0 - 0 என்ற கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.

அதேபோல், யூ - 14 பிரிவில் சாந்தோம் பள்ளி, 5 - 1 என்ற கோல் கணக்கில், எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளியை தோற்கடித்தது. பல்லவன் சாலை கேந்திரிய வித்யாலயா மற்றும் சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளிகளுக்கு இடையிலான ஆட்டம், 2 - 2 என்ற கோல் கணக்கில், 'டிரா'வில் முடிந்தது.






      Dinamalar
      Follow us