/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ப்ளூ ஸ்கை' கிரிக்கெட் லீக் போட்டி ஒய்.ஆர்.சி., லாஜிஸ்டிக்ஸ் அணி வெற்றி

ADDED : ஏப் 05, 2025 12:13 AM
சென்னை, 'ப்ளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி' சார்பில், 'லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் போட்டிகள், சென்னையில் நடந்து வருகின்றன. இதில், ஒன்பது அணிகள், தலா எட்டு போட்டிகள் வீதம் 'லீக்' முறையில் மோதி வருகின்றன. போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், அரையிறுதி சுற்றிற்கு தகுதி பெறும்.
அதன்படி, ஒய்.ஆர்.சி., லாஜிஸ்டிக்ஸ் மற்றும் 'பேஸ் அன் ஸ்விங்' அணிகள் மோதிய, 'ஏ' மண்டலத்திற்கான லீக் போட்டி, சேத்துப்பட்டில் இரு நாட்களுக்கு முன் நடந்தது.
'டாஸ்' வென்ற, ஒய்.ஆர்.சி., லாஜிஸ்டிக்ஸ் அணி முதலில் பேட் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 25 ஓவர்களில், ஐந்து விக்கெட் இழப்பிற்கு, 190 ரன்கள் குவித்தது.
கடினமான இலக்கை நோக்கி, அடுத்து பேட் செய்த 'பேஸ் அன் ஸ்விங்' அணி, 23 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.