/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நொளம்பூரில் ரூ.3 கோடியில் விளையாட்டு அரங்க பணி
/
நொளம்பூரில் ரூ.3 கோடியில் விளையாட்டு அரங்க பணி
ADDED : டிச 09, 2025 05:19 AM
நொளம்பூர்: நொளம்பூரில், மூன்று கோடி ரூ பாய் மதிப்பில் 2.50 ஏக்கர் நிலத்தில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
வளசரவாக்கம் மண்டலம், நொ ளம்பூர் 143வது வார்டு யூனியன் சாலையில் உள்ள 2.50 ஏக்கர் நிலத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் 'முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம்' அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், இந்த விளையாட்டு அரங்க பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். மதுரவாயல் தி.மு.க., - எம்.எல்.ஏ., கணபதி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த விளையாட்டு அரங்கில், கூடைப்பந்து, பூப்பந்து, கபடி மைதானங்கள், குத்துச்சண்டை, கிரிக்கெட் உள்ளிட்ட பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'விளையாட்டு மே ம்பாட்டு ஆணையத்தின் 2.50 கோடி ரூபாய், தொகுதி எம்.எல்.ஏ., நிதி 50 லட்சம் ரூபாயில், விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது.
இது, நொளம்பூர், மதுரவாயல், முகப்பேறு, அடையாளம்பட் டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பயன் பெறும் வகையில் இருக்கும்' என்றனர்.
பரங்கிமலை, கன்டோன்மென்ட் பகுதி, பூந் தமல்லி சாலையில் 1.25 ஏக்கர் நிலபரப்பில் 3 கோடி ரூபாயில் சிறு விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

