ADDED : அக் 30, 2024 12:27 AM

'குருவிடம் ஒப்படைத்தால் போதும்'
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷஷாயி பேசியதாவது:
கடந்த 2017ல் மகா சன்னிதானம் ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் கோவை வந்திருந்தார். ஒரு தலைப்பை கொடுத்து பேச சொன்னார். மனதை திடப்படுத்திக்கொண்டு, இதுவரை என்னை வழிநடத்திய ஆச்சாரியார், இப்போதும் என்னை வழிநடத்துவராக எனக்கூறி பேசத் தொடங்கினேன். என்ன பேசினேன் என்பது எனக்கு தெரியவில்லை. நன்றாக பேசுவதாக பலர் பாராட்டினர். பேசிக் கொண்டிருக்கும்போதே, மகா சன்னிதானம் ஆசிர்வதித்தாக சொன்னார்கள். பேசியதும் அவரே; பாராட்டியதும் அவரே என்பதை உணர்ந்தேன்.
கடந்த 1992 ஜனவரியில், என் சொந்த வாழ்வில் பிரச்னை இருந்த நேரம். அதனால், மகா சன்னிதானம் வந்தபோது பார்க்க விரும்பவில்லை. என் கோபத்தை காட்ட அரைக்கால் சட்டை அணிந்து சென்றேன். பூஜைக்கு அம்மா அழைத்தும் சினிமாவுக்கு சென்றேன்.
ஆனால், சினிமா பிடிக்காமல் பாதியில் திரும்பி, பூஜையில் இருந்த அம்மாவிடம், வீட்டு சாவியை வாங்க சென்றேன். அப்போது, சன்னிதானத்தை தரிசிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. சிருங்கேரிக்கு அழைத்தார். இதுவெல்லாம் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள். குருவிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு, எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்று இருந்தால் நல்லது நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சேவை அமைப்புகளுக்கு உதவி
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சர்வோதயா மகளிர் இல்லத்திற்கு சமையலறை, கழிவறைகள் கட்ட, 10 லட்சம் ரூபாய்; 'ஆட்டிசம்' பாதிப்புள்ள குழந்தைகளை பராமரித்து வரும் 'வசந்தம்' அமைப்புக்கு, ஆவடியில் புதிய கட்டடம் கட்ட, 10 லட்சம் ரூபாய்; ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து வரும் 'சக்தி' அன்பு இல்லத்திற்கு, 2 லட்சம் ரூபாயை, சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள் வழங்கினார்.