sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கண்ணாடி பிம்பம் போல் அடவு ஸ்ரீநிதி - ஸ்ரீகவி அசத்தல் நடனம்

/

 கண்ணாடி பிம்பம் போல் அடவு ஸ்ரீநிதி - ஸ்ரீகவி அசத்தல் நடனம்

 கண்ணாடி பிம்பம் போல் அடவு ஸ்ரீநிதி - ஸ்ரீகவி அசத்தல் நடனம்

 கண்ணாடி பிம்பம் போல் அடவு ஸ்ரீநிதி - ஸ்ரீகவி அசத்தல் நடனம்


ADDED : டிச 27, 2025 05:23 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி ருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் எப்படியிருக்கும், அதனுள் வீற்றிருக்கும் சுவாமி என்ன அலங்காரத்தில் இருப்பார் என்பதை, மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில், தங்கள் ஒப்பனை மற்றும் அடவு முறைகளில் கச்சிதமாக காண்பித்தனர், வளரும் நாட்டிய கலைஞர்களான ஸ்ரீகவி - ஸ்ரீநிதி.

சங்கீர்ண சாபு தாள அலாரிப்புடன், கோவிலின் பிரமாண்ட நடைதிறப்பு, விக்ரஹ வடிவமைப்பு, சுவாமிக்கு பூஜைகள் செய்வதை, தங்கள் நடனத்தில் காட்சியாக மாற்றி, ஆரம்பத்திலே அசரடித்தனர்.

நாராயணனாக ஸ்ரீநிதியும், லட்சுமியாக ஸ்ரீகவியும் செய்த அபிநயங்களை பார்த்ததுமே, சபைக்கு வந்தோருக்கு தரிசனம் கிடைத்துவிட்டதாகவே எண்ண தோன்றியது.

அடுத்து, முக்கிய உருப்படியாக வர்ணத்தை துவக்கினர். 'சகியே' என்ற வர்ணத்தில் தசாவதாரங்களை காட்டிய இருவரும், ராஜகோபசுவாமியின் அழகை வர்ணிக்க துவங்கினர்.

நாயகி தோழியாகவும், தோழி நாயகியாகவும் மாறி மாறி, சுவாமியை வர்ணித்தனர்.

சங்கு சக்கரம் ஏந்திய சுவாமியின் கரம் எவ்வளவு மிருதுவாக இருக்கிறது என பார்த்தாயா? என்பதை ஸ்ரீகவி அபிநயம் செய்ய, தோழியாக இருந்த ஸ்ரீநிதி நாயகியாக மாறி சுவாமியின் அலங்காரத்தையும், முக லட்சணத்தையும் குறிப்பிட்டு ஆடினார். இருவரும் மாறி மாறி சண்டையிட்டு கொண்டது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தொடர்ச்சியாக, 'பாங்கா மயிலாய்' சரணம் நிகழ்த்தப்பட்டது. காதலன் மீதான மோகத்தையும், தாபத்தையும் அடவு கோர்வைகளில், கண்ணாடி பிம்பம் போல் மாற்றி மாற்றி காட்டி, பார்வையாளர்களுக்கு உச்சபட்ச ரசனையை ஏற்படுத்தினர்.

நிறைவாக, சூர்யனை மையப்படுத்தி, சூர்யா ராகத்தில் அமைந்த தில்லானாவை, பஞ்சநடை கோர்வைகளுடன் அடுக்கடுக்கான கணக்குகளுடன், மகுடமாய் அமைத்தனர். ஸ்ரீலதா வினோத், பிரீத்தி மகேஷ், வேத கிருஷ்ணராம், முகுந்த் சாம்ராஜ் ஆகியோர் பக்கவாத்தியம் இசைத்து, இவர்களுக்கு ஒளியாய் விளங்கினர்.

-மா.அன்புக்கரசி






      Dinamalar
      Follow us