/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளாண் கல்லுாரி விளையாட்டு போட்டி எஸ்.ஆர்.எம்., கல்லுாரி அணி சாம்பியன்

ADDED : ஜூலை 04, 2025 12:36 AM

சென்னை, மாநில அளவில், வேளாண் கல்லுாரிகளுக்கு இடையில் நடந்த விளையாட்டு போட்டிகளில், எஸ்.ஆர்.எம்., வேளாண் கல்லுாரி அணி முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது.
எஸ்.ஆர்.எம்., வேளாண் அறிவியல் கல்லுாரி சார்பில், 'சேர்மன்ஸ் கோப்பை ஸ்பைக்கர் 25' எனப்படும், வேளாண் கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில விளையாட்டு போட்டிகள், அச்சிறுப்பாக்கம் எஸ்.ஆர்.எம்., கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
இதில், மாநிலத்தின் 10 வேளாண் கல்லுாரிகளைச் சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகள், ஜூன் 29ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கின்றன.
இதில், வாலிபால், கோ - கோ, கால்பந்து உட்பட, ஒன்பது விளையாட்டுகள் இடம்பெற்றன. போட்டிகளின் முடிவில், சிறப்பாக விளையாடிய எஸ்.ஆர்.எம்., வேளாண் கல்லுாரி அணி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இரண்டாவது இடத்தை, குமரகுரு வேளாண் கல்லுாரி கைப்பற்றியது.