/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரிகளுக்கான மாநில கூடைப்பந்து எஸ்.ஆர்.எம்., ஆண்கள் அணி தங்கம்
/
கல்லுாரிகளுக்கான மாநில கூடைப்பந்து எஸ்.ஆர்.எம்., ஆண்கள் அணி தங்கம்
கல்லுாரிகளுக்கான மாநில கூடைப்பந்து எஸ்.ஆர்.எம்., ஆண்கள் அணி தங்கம்
கல்லுாரிகளுக்கான மாநில கூடைப்பந்து எஸ்.ஆர்.எம்., ஆண்கள் அணி தங்கம்
ADDED : ஜூலை 18, 2025 12:00 AM

சென்னை, மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை ஆண்கள் அணி, சென்னை ஹிந்துஸ்தான் கல்லுாரி அணியை வீழ்த்தி, தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
ராகவேந்திரா கூடைப்பந்து கிளப் சார்பில், ஆடவருக்கான மாநில அளவிலான, 33வது கூடைப்பந்து போட்டி, தி.நகர், ஸ்ரீராகவேந்திரா கூடைப்பந்து மைதானத்தில், கடந்த 16ம் தேதி துவங்கியது. இதில், கல்லுாரி அணிகள் லீக் முறையில் மோதின.
இதன் முதல் லீக் போட்டியில், டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி அணியை எதிர்த்து மோதிய, எஸ்.ஆர்.எம்., அணி 62 -- 83 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது.
அடுத்து நடந்த லீக் சுற்றில், சென்னையின் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லுாரி அணியிடம், 71 - 65- என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்த நிலையில், நேற்று இறுதி நாள் லீக் ஆட்டம் நடந்தது.
இதில், எஸ்.ஆர்.எம்., கல்லுாரி அணி, சென்னை ஹிந்துஸ்தான் கல்லுாரி அணியை எதிர்த்துப் போட்டியிட்டது.
விறுவிறுப்பான அப்போட்டியில், சிறப்பாக விளையாடிய எஸ்.ஆர்.எம்., ஆண்கள் அணி, 81 - 71 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
லீக் போட்டி வெற்றி அடிப்படையிலான பட்டியலில், இரண்டாவது இடத்தில் வைஷ்ணவா கல்லுாரி அணியும், மூன்றாவது இடத்தில் ஹிந்துஸ்தான் கல்லுாரி அணியும் இடம்பிடித்துள்ளன.