/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஆர்.எம்., பனிமலர் கல்லுாரி 'சைபர் ஹேக்கத்தானில்' அபாரம்
/
எஸ்.ஆர்.எம்., பனிமலர் கல்லுாரி 'சைபர் ஹேக்கத்தானில்' அபாரம்
எஸ்.ஆர்.எம்., பனிமலர் கல்லுாரி 'சைபர் ஹேக்கத்தானில்' அபாரம்
எஸ்.ஆர்.எம்., பனிமலர் கல்லுாரி 'சைபர் ஹேக்கத்தானில்' அபாரம்
ADDED : மார் 03, 2024 02:16 AM

சென்னை:சென்னை 'சைபர் கிரைம்' செல் மற்றும் எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி இணைந்து, மாணவர்கள் மற்றும் 'ஸ்டார்ட் அப்' குழுக்களுக்கான 'சைபர் ஹேக்கத்தான்' போட்டிகளை நடத்தியது.
இதன் இறுதிப்போட்டி, ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில், 1, 2ம் தேதிகளில் நடந்தன. ஆறு தலைப்புகளின் கீழ், போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், எஸ்.ஆர்.எம்., கல்லுாரியைச் சேர்ந்த மாணவர் அசிந்தியா சிங் குழுவினர் முதல் பரிசையும், பனிமலர் பொறியியல் கல்லுாரியைச் சேர்ந்த மாணவர் கவுசிங்ராம் குழுவினர் இரண்டாம் பரிசையும், எஸ்.ஆர்.எம்., கல்லுாரியைச் சேர்ந்த சும்ரேஷ் குழுவினர் மூன்றாவது பரிசையும் வென்றனர்.
போட்டியில், சிறப்பாக செயல்பட்ட, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர் ஜித்தீஷ் மற்றும் கே.சி.ஜி., கல்லுாரி மாணவர் இயாத் லுக்மான் ஆகியோருக்கு, 'எச்.இ.பி.இ.எஸ்.இ.சி.,' என்ற தனியார் நிறுவனம், சைபர் தடயவியல் தொடர்பான இலவச பயிற்சி அளிக்க உள்ளது.