/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் தேசிய தடகளத்தில் சாதனை
/
எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் தேசிய தடகளத்தில் சாதனை
ADDED : ஜூன் 27, 2025 12:49 AM

சென்னை, தேசிய தடகள யு - 20 போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலையைச் சேர்ந்த சாதனா ரவி, கோகுல் பாண்டியன் ஆகியோர், தலா ஒரு தங்கம் வென்று அசத்தினர்.
இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் 23வது தேசிய ஜூனியர் யு - 20 கூட்டமைப்பு தடகள சாம்பியன்ஷிப் போட்டி, உ.பி., மாநிலத்தில் உள்ள மதன்மோகன் மாளவியா விளையாட்டு மைதானத்தில், கடந்த 22ல் துவங்கி 24ம் தேதி நிறைவு பெற்றது.
இதில், அனைத்து மாநில அணிகளும் பங்கேற்றன. தமிழகம் சார்பில் எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கோகுல்பாண்டியன் போட்டி துாரத்தை 21.33 வினாடியில் கடந்து தங்கம் வென்று அசத்தினார்.
பெண்கள் பிரிவு மும்முறை தாண்டுதல் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி சாதனா ரவி, 12.75 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார்.