/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
25 மணி நேரம் தொடர்ந்து யோகா- எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் அசத்தல்
/
25 மணி நேரம் தொடர்ந்து யோகா- எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் அசத்தல்
25 மணி நேரம் தொடர்ந்து யோகா- எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் அசத்தல்
25 மணி நேரம் தொடர்ந்து யோகா- எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் அசத்தல்
ADDED : ஆக 26, 2025 12:35 AM

சென்னை, சென்னை எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், நிறுவனர் பிறந்த நாளை முன்னிட்டு, ஆகஸ்ட் 23 முதல் 24 வரை, காட்டாங்கொளத்துார் வளாகத்தில், 25 மணி நேரம் இடைவிடாமல் யோகாசனம் செய்து, நோவா உலக சாதனை முயற்சி செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை, விளையாட்டு மற்றும் யோகா துறைகள் இணைந்து நடத்தின. இதில், 240 மாணவ - மாணவியர், 30 குழுக்களாகப் பங்கேற்று, காலை 4:30 மணி முதல் மாலை 6:40 மணி வரை சூரிய நமஸ்காரமும், மாலை 6:40 மணி முதல் மறுநாள் காலை 5:30 மணி வரை சந்திர நமஸ்காரமும் செய்தனர். நிகழ்ச்சியின் போது, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.