/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேந்தர் கோப்பை ஹாக்கி எஸ்.ஆர்.எம்., அணி முதலிடம்
/
வேந்தர் கோப்பை ஹாக்கி எஸ்.ஆர்.எம்., அணி முதலிடம்
ADDED : செப் 08, 2025 06:14 AM

சென்னை: வேந்தர் கோப்பை ஹாக்கியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி முதலிடத்தை கைப்பற்றியது.
செங்கல்பட்டு, காட்டாங்கொளத்துாரில், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் வேந்தர் கோப்பைக்கான ஹாக்கி போட்டி, கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. போட்டியில், சென்னை, மதுரை, விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் இருந்து, மொத்தம் 16 கல்லுாரி அணிகள், 'நாக் அவுட்' முறையில் மோதின.
முதல் அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி அணிகள் மோதின. அதில், 2 - 1 என்ற கோல் கணக்கில், எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி, 2 - 1 என்ற கோல் கணக்கில் எஸ்.ஆர்.எம்., பல்கலை 'பி' அணியை தோற்கடித்து, இறுதி போட்டியில் நுழைந்தது.
இறுதி போட்டியில் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 3 - 1 என்ற கணக்கில், எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரியை தோற்கடித்து முதலிடத்தை தட்டிச் சென்றது. மதுரை, சவுராஷ்டிரா கல்லுாரி, எஸ்.ஆர்.எம்., 'பி' அணிகள் மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்தன.