/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில பூப்பந்தாட்ட போட்டி எஸ்.ஆர்.எம்., அணி முதலிடம்
/
மாநில பூப்பந்தாட்ட போட்டி எஸ்.ஆர்.எம்., அணி முதலிடம்
மாநில பூப்பந்தாட்ட போட்டி எஸ்.ஆர்.எம்., அணி முதலிடம்
மாநில பூப்பந்தாட்ட போட்டி எஸ்.ஆர்.எம்., அணி முதலிடம்
ADDED : ஏப் 24, 2025 12:07 AM

சென்னை, திருச்சியில் நடந்த மாநில பூப்பந்து போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி முதலிடத்தை பிடித்தது.
மாநில அளவிலான ஓபன் 'பி' கிரேடு பூப்பந்து போட்டி, திருச்சியில் கடந்த 18ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. போட்டியில் பல்வேறு கல்லுாரி, கிளப், அகாடமி என, 24 அணிகள் பங்கேற்றன.
போட்டிகள், 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் நடந்தன. 'லீக்' சுற்றில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 35 - 11, 35 - 15 என்ற கணக்கில், திருச்சி ஆர்.ஜெ.ஜெ., அணியையும்; மற்றொரு லீக் சுற்றில், 35 - 30, 35 - 28 என்ற கணக்கில் செங்கல்பட்டு ஜெ.ஜெ.,பாய்ஸ் அணியையும் தோற்கடித்தது.
கடைசி லீக் சுற்றில், எஸ்.ஆர்.எம்., அணி, 35 - 28, 35 - 29 என்ற கணக்கில், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியை வீழ்த்தியது.
அனைத்து போட்டிகள் முடிவில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி முதலிடத்தையும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி இரண்டாம் இடத்தையும், செங்கல்பட்டு ஜெ.ஜெ.பாய்ஸ் அணி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.