/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளிர் கிரிக்கெட் போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன்
/
மகளிர் கிரிக்கெட் போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன்
மகளிர் கிரிக்கெட் போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன்
மகளிர் கிரிக்கெட் போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன்
ADDED : ஆக 08, 2025 12:40 AM

சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்த மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் எஸ்.ஆர்.எம்., மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
எஸ்.ஆர்.எம்., பல்கலையின் நிறுவனர் பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலை மைதானத்தில் நடந்து வந்த கல்லுாரி மாணவியருக்கான கிரிக்கெட் போட்டி, நேற்றுடன் முடிந்தது. சென்னை உட்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றன.
நேற்று நடந்த இறுதி போட்டியில், 'டாஸ்' வென்ற சென்னை குருநானக் கல்லுாரி, பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை, அந்த அணி எடுத்தது. அதன் வீராங்கனையர் ரோஷினி - 22, வைஷ்ணவி - 16 அதிகபட்ச ரன்கள் அடித்தனர்.
பின், 104 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய எஸ்.ஆர்.எம்., அணியின் வீராங்கனையர் சுபஹாரிணி மற்றும் அப்ரா - முஸ்கான் ஆகியோர், எதிரணியின் பந்து வீச்சை தவிடு பொடியாக்கினர்.
முடிவில், எஸ்.ஆர்.எம்., மகளிர் அணி 17.4 ஓவருக்கு 104 ரன்கள் அடித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றதோடு, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.