/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவியர் சாம்பியன் வாலிபால் பைனலில் போராடி வீழ்ந்தது ஜேப்பியார் அணி
/
எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவியர் சாம்பியன் வாலிபால் பைனலில் போராடி வீழ்ந்தது ஜேப்பியார் அணி
எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவியர் சாம்பியன் வாலிபால் பைனலில் போராடி வீழ்ந்தது ஜேப்பியார் அணி
எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவியர் சாம்பியன் வாலிபால் பைனலில் போராடி வீழ்ந்தது ஜேப்பியார் அணி
ADDED : ஜன 12, 2025 10:52 PM

சென்னை:சென்னையில் நடந்த தென்மண்டல பல்கலை மாணவியருக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில், பலம் வாயந்த எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி முதலிடம் பிடித்து, கோப்பையை வென்றது.
அகில இந்திய பல்கலை கூட்டமைப்பு ஆதரவுடன், தென்மண்டல பல்கலை மகளிர் அணிகளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள், செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பல்கலை மைதானத்தில், ஜன., 7ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த, 78 பல்கலை அணிகள் பங்கேற்றன.
இதில், தமிழகத்தின் ஜேப்பியார், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணிகளும் கேரளாவின் கோழிக்கோடு, மகாத்மா காந்தி பல்கலை அணிகளும் காலிறுதியில் வென்று, இறுதி 'லீக்' சுற்றுக்கு முன்னேறின.
இதில் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி முதல் 'லீக்' சுற்றுப் போட்டியில் 25 - -17, 25 - -13, 25 - -15 என்ற புள்ளிக் கணக்கில் கோழிக்கோடு பல்கலை அணியை வீழ்த்தியது.
அடுத்து நடந்த இரண்டாவது 'லீக்' சுற்றுப் போட்டியில், 16- - 25, 25- - 21, 25 - -16, 25 - -15 என்ற புள்ளிக் கணக்கில், கேரளா மகாத்மா காந்தி பல்கலை அணியை வீழ்த்திய எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி வீராங்கனையர், இறுதி 'லீக்' சுற்றில் ஜேப்பியார் பல்கலை அணியை எதிர்கொண்டது.
இரு அணிகளும் பலம்பொருந்திய அணிகள் என்பதால், துவக்கம் முதலே ஆட்டத்தில் அனல் பறந்தது. இதில், 14- - 25, 25 - -19, 17 - -25, 27- - 25 என்ற புள்ளிக்கணக்கில் ஜேப்பியார் அணி முதல் மற்றும் மூன்றாவது செட்டையும், எஸ்.ஆர்.எம்., அணி இரண்டாவது மற்றும் நான்காவது செட்டையும் தனதாக்கின. இதனால், ஆட்டம் ஐந்தாவது செட்டிற்கு நகர்ந்தது. வெற்றி தோல்வி மதில் மேல் பூனை என்ற கணக்கில் இருந்தது. நான்காவது செட்டை கைப்பற்றிய உற்சாகத்தில் களமிறங்கிய எஸ்.ஆர்.எம்., மாணவியர் ஐந்தாவது செட்டை 15 - 9 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்று, சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
ஜேப்பியார், மகாத்மா காந்தி, கோழிக்கோடு பல்கலை அணிகள், முறையே அடுத்தடுத்த இடங்களை பெற்றன.