/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில ஆண்கள் கபடி போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி
/
மாநில ஆண்கள் கபடி போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி
மாநில ஆண்கள் கபடி போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி
மாநில ஆண்கள் கபடி போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி
ADDED : ஏப் 22, 2025 12:44 AM

சென்னை, ஏமாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி முதலிடத்தை பிடித்து அசத்தியது.
என்.ஆர்.கே., ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டி, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் கடந்த 19ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது.
போட்டியில் திருவள்ளூர், சென்னை மாவட்ட அணிகள் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி உள்ளிட்ட, 16 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக் - அவுட் முறையில் நடந்தன.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில், எஸ்.ஆர்.எம்., பல்கலை, 18 - 6 என்ற கணக்கில், திருவள்ளூர் மாவட்ட அணியை வீழ்த்தியது.
காலிறுதியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை, 22 - 13 என்ற கணக்கில், சென்னை மாவட்ட அணியையும், அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 16 - 8 என்ற கணக்கில் சிட்டி போலீஸ் அணியை தோற்கடித்தன.
இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் திருவள்ளூர் என்.ஆர்.கே., ஸ்போர்ட்ஸ் கிளப் அணிள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், 21 - 15 என்ற கணக்கில், எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றது.
***