/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கபடியில் சாய்ராம் கல்லுாரி 'சாம்பியன்' பைனலில் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை தோல்வி

ADDED : செப் 15, 2025 12:30 AM

சென்னை;அண்ணா பல்கலை மண்டல கபடி போட்டி, இறுதியாட்டத்தில் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை அணியை வீழ்த்தி, ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
அண்ணா பல்கலை, அதன் மண்டலங்களுக்கு இடையே பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. இதில், நான்காவது மண்டலத்திற்கான கபடி போட்டி, தாம்பரத்தில் உள்ள பிரின்ஸ் டாக்டர்.கே.வாசுதேவன் பொறியியல் கல்லுாரியில், கடந்த 12ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
போட்டியில் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை, தாக்கூர், சாய்ராம் தொழில்நுட்பக் கல்லுாரி, எம்.ஐ.டி., உட்பட 13 அணிகள் 'நாக் அவுட்' முறையில் மோதின.
போட்டியில் அசத்திய சாய்ராம் பொறியியல் கல்லுாரி அணி, முதல் காலிறுதியில் 28 - 23 என்ற புள்ளிக்கணக்கில் ஆதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியை தோற்கடித்தது.
அரையிறுதியில், 28 - - 29 என்ற புள்ளியில் பெரி தொழில்நுட்ப கல்லுாரியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப் போட்டியில், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி மற்றும் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை அணிகள் மோதின.
போட்டியின் துவக்கம் முதலே, ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி அணியினர் அதிரடியாக விளையாடி புள்ளிகள் குவித்தனர். முடிவில் அந்த அணி, 40 - 25 என்ற புள்ளியில் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை அணியை வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை வென்றது.