/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொங்கு சுழற்கோப்பை வென்றது எஸ்.ஆர்.எம்.,
/
கொங்கு சுழற்கோப்பை வென்றது எஸ்.ஆர்.எம்.,
ADDED : அக் 02, 2024 12:14 AM
சென்னை, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லுாரி சார்பில், தமிழக கல்லுாரிகள் இடையிலான, கொங்கு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், தமிழகத்தின் 60க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
ஆண்களுக்கான பேட்மின்டன் இறுதி ஆட்டத்தில் 3 - -2 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி., கல்லுாரி அணியை வீழ்த்திய எஸ்.ஆர்.எம்., இதே ஆட்டத்தின் பெண்கள் பிரிவில் செயின்ட் ஜோசப் கல்லுாரி அணியை 2 - -1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
கூடைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம்., ஆண்கள் அணி முதலிடத்தையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. டேபிள் டென்னிஸ் போட்டியில், பெண்கள் அணி முதலிடத்தையும், ஆண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

