/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிகளுக்கான கிரிக்கெட் தொடர் பைனலில் செயின்ட் பேட்ஸ் பள்ளி
/
பள்ளிகளுக்கான கிரிக்கெட் தொடர் பைனலில் செயின்ட் பேட்ஸ் பள்ளி
பள்ளிகளுக்கான கிரிக்கெட் தொடர் பைனலில் செயின்ட் பேட்ஸ் பள்ளி
பள்ளிகளுக்கான கிரிக்கெட் தொடர் பைனலில் செயின்ட் பேட்ஸ் பள்ளி
ADDED : ஆக 27, 2025 11:01 AM
சென்னை,: சென்னை மாவட்ட அளவில், பள்ளிகளுக்கு இடையே நடக்கும் டி.என்.சி.ஏ., கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில், சாந்தோம் செயின்ட் பேட்ஸ் பள்ளி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையே, 'சோமசுந்தரம் டிராபி' கிரிக்கெட் போட்டி, சென்னை மேடவாக்கத்தில் உள்ள சுமங்கலி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகின்றது. இதன் அரையிறுதி போட்டிகள், நேற்று நடந்தன.
இதில், எழும்பூர், டான் பாஸ்கோ 'ஏ' அணி, சாந்தோம், செயின்ட் பேட்ஸ் பள்ளி அணியை எதிர்த்து ஆடியது.
இதில், முதலில் ஆடிய டான் பாஸ்கோ அணி, 6 விக்கெட் இழப்பிற்கு, 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய செயின்ட் பேட்ஸ் பள்ளி அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஜதன் ஜோனா டேவிட் - 60, சச்சின் - 69 ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 48.3 ஓவர்களில், 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் அடித்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதி போட்டியில் நுங்கம்பாக்கம், பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி அணியை, கொளப்பாக்கம், ஹார்ட்புல்னஸ் இன்டர்நேஷனல் பள்ளி அணி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.