/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செயின்ட் ஜோசப் பெண்கள் அணி பேட்மின்டன் போட்டியில் 'சாம்பியன்'
/
செயின்ட் ஜோசப் பெண்கள் அணி பேட்மின்டன் போட்டியில் 'சாம்பியன்'
செயின்ட் ஜோசப் பெண்கள் அணி பேட்மின்டன் போட்டியில் 'சாம்பியன்'
செயின்ட் ஜோசப் பெண்கள் அணி பேட்மின்டன் போட்டியில் 'சாம்பியன்'
ADDED : ஆக 11, 2025 01:34 AM

சென்னை:எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்த மாநில பேட்மின்டன் போட்டியின் ஆண்கள் பிரிவில், எஸ்.ஆர்.எம்., அணியும், பெண்கள் பிரிவில் செயின்ட் ஜோசப் கல்லுாரி அணியும், 'சாம்பியன்' பட்டத்தை வென்றன.
எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர் கோப்பைக்கான, கல்லுாரிகளுக்கு இடையே மாநில அளவிலான பேட்மின்டன் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்தது. சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதன் அரையிறுதி போட்டியில் வள்ளியம்மை பொறியியல் கல்லுாரியை 2 - 0 என்ற செட் கணக்கில் வீழ்த்திய எஸ்.ஆர்.எம்., ஆண்கள் அணி, இறுதி போட்டியில் குருநானக் கல்லுாரி அணியுடன் மோதியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அசத்திய எஸ்.ஆர்.எம்., அணி 2 - 1 என்ற செட் கணக்கில், குருநானக் கல்லுாரி அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது.
அதேபோல் பெண்கள் பிரிவுக்கான இறுதி போட்டியில் செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி, எஸ்.ஆர்.எம்., பல்கலை பெண்கள் அணியை எதிர்த்து மோதியது.
இதில், செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி 2 - 1 என்ற செட் கணக்கில், எஸ்.ஆர்.எம்., அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.