/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் அணி 'சாம்பியன்'
/
பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் அணி 'சாம்பியன்'
பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் அணி 'சாம்பியன்'
பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் அணி 'சாம்பியன்'
ADDED : ஏப் 25, 2025 12:00 AM

சென்னை,
குரு ஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் வித்யாலயா பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் மற்றும் எறிப்பந்து போட்டிகள், வேப்பேரியில் உள்ள பள்ளி வளாகத்தில் நடக்கின்றன.
இதில், கொளத்துார் விவேகானந்தா, செயின்ட் பீட்ஸ், ஸ்ரீ பாலா வித்யாலயா, சிந்தி மாடல், பெரம்பூர் விவேகானந்தா, மகரிஷி உள்ளிட்ட 12 அணிகள், 'நாக் அவுட்' முறையில் மோதி வருகின்றன.
நேற்று மதியம் நடந்த முதல் அரையிறுதியில், செயின்ட் பீட்ஸ் மற்றும் பெரம்பூர் விவேகானந்தா பள்ளி அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், 15 - 9, 15 - 7 என்ற கணக்கில், செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில், கொளத்துார் விவேகானந்தா அணி மற்றும் குருகுலம் கே.பி.ஜெ., அணிகள் எதிர்கொண்டன. அதில், 15 - 12, 10 - 15, 15 - 9 என்ற கணக்கில், கொளத்துார் விவேகானந்தா பள்ளி வெற்றி பெற்றது.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் மற்றும் கொளத்துார் விவேகானந்தா பள்ளி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செயின்ட் பீட்ஸ் அணி, 15 - 5, 15 - 12 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தொடர்ந்து, எறிப்பந்து போட்டிகள் நடக்கின்றன.

